முதல்வர் ஸ்டாலின் அக். 26-ல் மரக்காணம் வருகை : முன்னேற்பாட்டுப் பணியில் அமைச்சர், அதிகாரிகள் தீவிரம்

மரக்காணம் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான கழிக்குப்பம் பகுதியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அருகில் ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் உள்ளனர்.
மரக்காணம் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான கழிக்குப்பம் பகுதியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அருகில் ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் உள்ளனர்.
Updated on
1 min read

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் அக்டோபர் 26-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு செல்கிறார். செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பல்வேறுநலத்திட்டங்களை வழங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கான இடம் தேர்வு நேற்றுசிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்மஸ்தான் முன்னிலையில் நடைபெற்றது.விழுப்புரம் ஆட்சியர் மோகன், எஸ்பிநாதா மற்றும் அதிகாரிகள் அமைச்சரு டன் சென்று இடத்தை பார்வையிட்டனர். மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட கழிக்குப்பம், வசவன்குப்பம், மரக்காணம் ஒன்றியத் திற்குட்பட்ட முதலியார்சாவடிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான தகுதியான இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது திண்டிவனம் உதவி ஆட்சியர் அமீத், மரக்காணம் வட் டாட்சியர் உஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதில் பாதுகாப்பான, போக்கு வரத்துக்கு இடைஞ்சல் இல்லாத இடத்தை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் முறைப்படி மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in