கடலூர் மாவட்டத்தில் - பொது இடத்தில் மது அருந்திய 174 பேர் மீது வழக்கு :

கடலூர் மாவட்டத்தில் -  பொது இடத்தில் மது அருந்திய 174 பேர் மீது வழக்கு :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.

இதில் உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள கடலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன் காவல்உதவி எண்களை அறிமுகம் செய்தார். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 16-ம் தேதி வரை 174 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொது இடங்களில் மது அருந்தினால் கடலுார்- 9498100552, விருத்தாசலம் - 9498100571, சேத்தியாத்தோப்பு 94981 00588, திட்டகுடி -94981 00605, கடலூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு - 04142 284353 ஆகிய எண்களுக்கு தெரியப்படுத்தலாம்,

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in