

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சோதனைச்சாவடியில் போலீஸார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு ஆம்னி வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதற்குள் 18 சாக்குகளில் 750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அரியமங்கலம் நேருஜி நகரைச் சேர்ந்த அக்பர் அலி(61), இ.பி ரோடு கோனார் தெருவைச் சேர்ந்த சுரேஷ்(32) ஆகியோரைக் கைது செய்தனர்.