தனியார் பேருந்து நிறுவனத்தில் - முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தரக் கோரி மனு :

தனியார் பேருந்து நிறுவனத்தில்  -  முதலீடு செய்த பணத்தை  மீட்டுத் தரக் கோரி மனு :
Updated on
1 min read

தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்த கமாலுதீன் என்பவருக்கு சொந்தமான தனியார் பேருந்து நிறுவனத்தில், பங்குத்தொகையாக பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து பாதிக்கப்பட்டதாகக் கூறி, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர்.

இதுதொடர்பாக, அவர்கள் கூறியது: கமாலுதீனின் பேருந்து நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்துள்ளோம் அதற்கு, மாதந்தோறும் ரூ.2,000 முதல் ரூ.20,000 வரை பங்குத்தொகையாக வழங்கி வந்தார். கரோனா பரவல் காரணமாக பேருந்து சேவை இல்லாததால், 2 ஆண்டுகளாக கமாலுதீன் பங்குத்தொகை வழங்கவில்லை. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட கமாலுதீன் கடந்த செப்.19-ம் தேதி உயிரிழந்துவிட்டார். அதன்பிறகு, அவரது குடும்பத்தினரிடம் பணம் கேட்டால், எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்கின்றனர். இதில் தமிழகம் மட்டுமின்றி, அரபு நாடுகளில் உள்ளவர்கள் உட்பட 12 ஆயிரம் பேர், ரூ.700 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in