மாவட்ட காவல் துறை சார்பில் - வரும் 20-ம் தேதி 91 வாகனங்கள் பொது ஏலம் :

மாவட்ட காவல் துறை சார்பில் -   வரும் 20-ம் தேதி 91 வாகனங்கள் பொது ஏலம் :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என 91 வாகனங்களை வரும் 20-ம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் காவல் துறையால் பல்வேறு வழக்குகளில் நடைபெற்ற விசாரணைகள் மற்றும் வாகன தணிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் 81, நான்கு சக்கர வாகனங்கள் 9, மூன்று சக்கர வாகனம் ஒன்று என 91 வாகனங்களை, வரும் 20-ம் தேதி காலை 10 மணிக்கு அவிநாசி மடத்துப்பாளையம் சாலையில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு வளாகத்தில் பொது ஏலத்தில்விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை பொதுமக்கள் பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள், ஏல தினத்தன்று முன் வைப்புத் தொகை ரூ.5,000-ஐ ரொக்கமாக செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94440 38678 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in