தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் : நெரிசலில் திணறிய சேலம் கடை வீதி
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துக்கு இரு வாரங்கள் உள்ள நிலையில், புத்தாடைகள், வீட்டு உப யோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க சேலம் கடை வீதிகளில் மக்கள் திரண்ட தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளிப் பண்டிகை வரும் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை கொண் டாட்டத்தின்போது, புத்தாடை அணியும் வழக்கம் உள்ளதால், மக்கள் இப்போதே குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத் தினருக்கு புத்தாடைகளை வாங்கு வதில் ஆர்வமுடன் உள்ளனர். இந்நிலையில், ஜவுளிக் கடைகள் மட்டுமல்லாது, தீபாவளியை முன்னிட்டு வீட்டு உபயோகப் பொருட்கள், செல்போன்கள், நகைகள், வாகனங்கள் உள்பட பல வித பொருட்களும் சிறப்பு தள்ளுபடியில் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
விடுமுறை நாளான நேற்று, தீபாவளி பண்டிக்கைக்கு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்க சேலம் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது. குறிப்பாக பிரபல ஜவுளிக் கடைகள் உள்ள டிவிஎஸ் பேருந்து நிறுத்தம் ஓமலூர் சாலை, கடை வீதி, முதல் அக்ரஹாரம், 5 ரோடு, ஜங்ஷன் ரோடு உள்ளிட்ட சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
பொருட்களை வாங்கிச் செல்ல வந்தவர்கள், சாலை யோரங்களில் இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றை நிறுத்திச் சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து போலீஸார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்கு வரத்தை சீரமைத்தனர். கடை வீதிகளில் திரண்டிருந்த மக்களில் பலர் முகக்கவசம் அணியாமல் வந்ததுடன், சமூக இடைவெளியைப் பற்றி கவலைப்படாமல் வலம் வந்தனர். கரோனா தொற்றுப் பரவல் அபாயம் நீடித்திருக்கும் நிலையில், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாநக ராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் இணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கை களை மக்கள் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
