முஷ்ணம் அருகே வெள்ளாற்றில் - நெடுஞ்சேரி - பவழங்குடி இடையே உயர்மட்டப் பாலம் கட்டப்படுமா? :

முஷ்ணம் அருகே நெடுஞ்சேரி - பவழங்குடி இடையே வெள்ளாற்றில் உள்ள தடுப்பணை.
முஷ்ணம் அருகே நெடுஞ்சேரி - பவழங்குடி இடையே வெள்ளாற்றில் உள்ள தடுப்பணை.
Updated on
1 min read

முஷ்ணம் அருகே நெடுஞ் சேரி- பவழங்குடி இடையே வெள் ளாற்றின் தடுப்பணையில் உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

முஷ்ணம் அருகே  நெடுஞ் சேரி- பவழங்குடி இடையே வெள்ளாற்றில் தடுப்பணை அமைக்கப் பட்டுள்ளது. தடுப்பணை கரையுடன் இணையும் இருபகுதிகளிலும் வெள்ளாற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்தால் எளிதில் வடிய ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் இந்த தடுப்பணையில் மழை நீர் வழிந்தோடுகிறது.

இந்த நிலையில் முஷ்ணத்தில் இருந்து  நெடுஞ்சேரி வழியாக வெள்ளாற்றை கடந்து மறுபக்கம் பவழங்குடி வழிவழியாக விருத்தாச லம், நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். இது போல பவழங்குடி பகுதியில் இருந்து முஷ்ணம், சோழதரம், காட்டுமன்னார்கோவில் செல்ல பொதுமக்கள் இந்த தடுப்பணை வழியாக சென்று வருகின்றனர்.

வெள்ளாற்றில் உள்ள தடுப் பணை பகுதி நடைபாதை வழியாக இருக்கிறது. வெள்ள காலங்களில் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத அளவுக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால், ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த தடுப்பணை பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.

“பல வருடங்களாக ஆற்றில் இறங்கி எதிர்பகுதிக்குச் செல்கி றோம். சமயங்களில் இரவிலும் செல்ல நேர்கிறது.

தற்போது தடுப்பணை கட்டப் பட்டுள்ள பகுதியில் உயர் மட்டம் பாலம் அமைத்தால் இருபக்க கரையோரத்தில் இருக்கும் சுமார் 10-க்கும் மேற்பட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும், வாக னங்களும் எளிதில் செல்லும் எனவே அரசு உயர் மட்டப் பாலம் கட்டித்தர வேண்டும்” என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in