மூச்சுத்திணறி இளைஞர் உயிரிழப்பு? :

மூச்சுத்திணறி இளைஞர் உயிரிழப்பு? :
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஜி.ராவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டெரன்ஸி ஜோயல் (22). இவரது தந்தை கிளமென்ட் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். தாயார் ஜாக்லின் தற்போது துபாயில் பணிபுரிந்து வருகின்றார். டெரன்ஸி ஜோயல் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், டெரன்ஸி வீட்டின் மாடியில் நேற்று முன்தினம் இரவு புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது டெரன்ஸி ஜோயல் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்த விருதம்பட்டு காவல் துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த டெரன்ஸி ஜோயலுக்கு மது மற்றும் புகை பழக்கம் இருந் துள்ளது.

அவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் கையில் வைத்திருந்த சிகரெட்டை அணைக்காமல் உறங்கியிருக்கலாம் என்றும், அதனால் படுக்கையில் சிகரெட் நெருப்பால் ஏற்பட்ட புகை அறை முழுவதும் பரவி ஜோயல் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in