

அக்டோபர் முதல் டிசம்பர் வரை பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் வாழைப்பழங்களின் பண்ணை விலை நிலவரத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதுகுறித்து, இப் பல்கலைக்கழகம் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. கோவை, ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில் பயிரிடப்படும் நேந்திரன் வாழையானது, கேரள சந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. கேரள மக்களின் உணவு மற்றும் சீவல் தயாரிப்பில் நேந்திரன் வாழை முக்கியப் பங்கு வகிக்கிறது.
திருச்சி சந்தைக்கு லால்குடி, புதுக்கோட்டை, முசிறி, கடலூர், தேனி ஆகிய பகுதிகளிலிருந்து வாழை வரத்து உள்ளது. கோவை சந்தைக்கு புதுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும் உள்ளது. வர்த்தக மூலங்களின்படி, பண்டிகை காலம் காரணமாக வரும் மாதங்களில் வாழை தேவைஅதிகரிக்கக்கூடும். இச்சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக வேளாண்பல்கலை.யின் விலை முன்னறிவிப் புத் திட்டப் பிரிவு சார்பில், கடந்த 18 ஆண்டுகளாக கோவை சந்தையில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் விலை மற்றும் சந்தை விவரம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் அடிப்படையில், நடப்பு அக்டோபர் முதல் வரும் டிசம்பர் மாதம் வரை பூவன் வாழையின் சராசரி பண்ணை விலைகிலோவுக்கு ரூ.15, கற்பூரவள்ளிரூ.25, நேந்திரன் ரூ.32 வரைஇருக்கும் என கண்டறியப்பட்டுள் ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் தகுந்த முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.