மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம் :

மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம் :
Updated on
1 min read

ராமநாதபுரம் வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சபரி (17). இவர் நேரு நகரில் உள்ள இரு சக்கர வாகனப் பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு கடை வாயிலில் இரும்புக் கதவை மூடியுள்ளார். அப்போது கதவின் ஓரத்தில் சென்ற மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த சபரி உயிரிழந்தார். இது குறித்து கேணிக்கரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in