வேளாண்மை செழிக்க வேண்டி 108 கோ பூஜை :

வேளாண்மை செழிக்க வேண்டி 108 கோ பூஜை :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் முசிறி அருகிலுள்ள திண்ணக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் உடனாய கோவிந்தவல்லி அம்மன் கோயிலில் நேற்று 108 கோ பூஜை நடைபெற்றது.

அய்யாற்றில் தண்ணீர் வர வேண்டும். அதிக அளவில் மழை பெய்து இப்பகுதியில் உள்ள 33 ஏரிகள் நிரம்ப வேண்டும். வேளாண்மை செழித்து மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் கோயில் வளாகத்தில் ராமராஜ் சிவாச்சாரியார் தலைமையில் யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 108 பசுக்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.

திண்ணக்கோணம் அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் கோயில் நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், திண்ணக்கோணம், நாச்சம்பட்டி, வீரமணிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in