

திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘திருப்பூர் மாநகரில்தெற்கு, நல்லூர் மற்றும் வீரபாண்டிகாவல் நிலைய போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, உரிமை கோரப்படாமல்உள்ள 366 இருசக்கர வாகனங்களை ஏலம்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் படி, வரும் 28-ம் தேதிமதியம் 2 மணிக்கு திருப்பூர் தெற்குவட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் ஏலம்நடைபெற உள்ளது.
ஏலம் எடுக்க விரும்பும் பொதுமக்கள், அந்தந்த காவல் நிலையங்களுக்கு சென்று,ஆய்வாளரின் அனுமதி பெற்று, வாகனங்களை பார்வையிடலாம்.ஏலம் விடப்படும் வாகனங்களுக்குஉரியஆவணம் வழங்க பரிந்துரை செய்யப்படும்,’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.