Regional01
பணியின்போது உயிரிழந்த போலீஸாருக்கு நிவாரணம் :
சேலம் மாவட்ட காவல்துறையில் பணியின்போது, உடல் நலக்குறைவு மற்றும் விபத்தில் உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
சேலம் மாவட்ட காவல்துறையில் பணியில் இருந்தபோது, உடல் நலக்குறைவு மற்றும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உயிரிழந்த எஸ்எஸ்ஐ-க்கள் முருகன், சந்திரன், ரமேஷ் மற்றும் போலீஸ்காரர் சிங்காரவேலன் ஆகிய நால்வரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை எஸ்பி அபிநவ் வழங்கினார்.
