சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பணம் பறிப்பு : ராமேசுவரத்தில் போலி இயக்குநர் கைது

இமானுவேல் ராஜா
இமானுவேல் ராஜா
Updated on
1 min read

சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி, பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய போலி இயக்குநரை ராமேசுவரம் போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த டேவிட்துரைராஜ் மகன் இமானுவேல் ராஜா(43). இவர், அடிக்கடி ராமேசுவரம் வந்து தனியார் விடுதியில் தங்கியிருந்து தான் ஒரு சினிமா இயக்குநர் என்றும், விரைவில் படம் எடுக்கப்போவதாகவும் தெரிவித்து வந்துள்ளார். மேலும், தனது விடுதிஅறைக்கு பெண்களை வரவழைத்து தவறான வீடியோக்களை எடுத்துள்ளார். தனது திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி, பலரிடமும் லட்சக்கணக்கான ரூபாயை வாங்கி ஏமாற்றியுள்ளார்.

இது தொடர்பாக ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர் கார்த்திக் ராஜா, காவல்நிலையத்தில் புகார்தெரிவித்தார். இதையடுத்து இமானுவேல் ராஜாவை ராமேசுவரம் நகர் போலீஸார் கைது செய்தனர். இமானுவேல் ராஜாவிடமிருந்து 12 ஏடிஎம் கார்டுகள், 3 வங்கிகாசோலை புத்தகங்கள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கெனவே கோவில்பட்டி காவல்நிலையத்தில் நகை, பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in