2 முதல் 18 வயது சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி : அவசர கால பயன்பாட்டுக்கு நிபுணர் குழு ஒப்புதல்

2 முதல் 18 வயது சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி :  அவசர கால பயன்பாட்டுக்கு நிபுணர் குழு ஒப்புதல்
Updated on
1 min read

இரண்டு முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பாரத் பயோடெக் நிறு வனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்த நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையரின் (டிசிஜிஐ) இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 18 வயதுக்கு மேற்பட் டோருக்காக உருவாக்கிய கரோனா தடுப்பூசி (கோவாக்சின்) தற் போது பயன்பாட்டில் உள்ளது. இதையடுத்து 2 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான கோவாக்சின் தடுப்பூசியை இந்நிறுவனம் உருவாக்கியது. இந்த தடுப்பூசி 20 நாள் கால இடைவெளியில் 2 டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும்.

இந்த தடுப்பூசியின் இரண் டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை கடந்த செப்டம்பர் மாதம் பாரத் பயோ டெக் நிறுவனம் நிறைவு செய்தது. இதையடுத்து இதன் தரவுகளை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு (சிடிஎஸ்சிஓ) இம்மாதம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில் இதன் நிபுணர் குழு விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்த தடுப்பூசியை சில நிபந்தனைகளுக்கு உட் பட்டு அவசர கால பயன்பாட்டின் அடிப் படையில் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தனது இறுதி ஒப்புதலை விரைவில் வழங்குவார் எனத் தெரிகிறது. மேலும் இந்த தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் இம்மாதம் அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறார்களுக்கான கோவாக்சின் தடுப் பூசி ஒப்புதலுக்கு மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்திய மருத்துவர்கள் சங்கத் தலைவர் ஜே.ஏ.ஜெயலால் கூறும் போது, “குழந்தைகள் சமூக வாழ்க்கைக்கு திரும்ப இது காலத்தின் தேவை” என்றார்.

பாரத் பயோடெக் நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் அனுப் பிய பரிசோதனை தரவுகளை சிடிஎஸ்சிஓ மற்றும் அதன் நிபுணர் குழு முழுமையாக ஆராய்ந்து ஆக்கப்பூர்வமான பரிந்துரை களை வழங்கியுள்ளன. இது 2 முதல் 18 வயதினருக்கான கரோனா தடுப்பூசிகளுக்கான உலகளாவிய முதல் ஒப்புதல் களில் ஒன்றாகும். விரைவான ஆய்வு செய்ததற்காக நிபுணர் குழுவுக்கு நன்றி. இப்போது நாங்கள் டிசிஜிஐ இறுதி ஒப்புதலுக்காக காத்திருக் கிறோம்” என்று தெரிவித்து உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in