விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஈவெரா கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு :

மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த பெரியார் ஈவெரா கல்லூரி மாணவர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் சுகந்தி. உடன் உடற்கல்வி இயக்குநர் (பொ) சங்கரநாராயணன்.
மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த பெரியார் ஈவெரா கல்லூரி மாணவர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் சுகந்தி. உடன் உடற்கல்வி இயக்குநர் (பொ) சங்கரநாராயணன்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மண்டல அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் கடந்த 9, 10-ம் தேதிகளில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் நடைபெற்றன. இதில் திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி பி.ஏ வரலாறு 2-ம் ஆண்டு மாணவர் சூர்யா 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 1,500 மீ மற்றும் 5,000 மீ ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பிடித்தார்.

அதேபோல, தமிழ்நாடு இளையோர் விளையாட்டுக் கழகம் சார்பில் கரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் இதே கல்லூரியின் வணிகவியல் துறை மாணவி பாக்கியலட்சுமி 100 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகியவற்றிலும், விலங்கியல்துறை மாணவர் கார்த்திக்கேயன் 100 மீ ஓட்டப் போட்டியிலும் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி நேற்று நேரில் வரவழைத்துப் பாராட்டினார். அப்போது உடற்கல்வி இயக்குநர் (பொ) வெ.சங்கரநாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in