

திருப்பூர் போயம்பாளையம் அவிநாசி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். நூல் விற்பனை முகவரான இவர், திருப்பூரில்தனியார் நூற்பாலைக்கு கொடுக்கவேண்டிய ரூ.7 லட்சத்தை கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை செல்வராஜை தேடி காரில் ஒரு கும்பல் வீட்டுக்கு வந்துள்ளது. அவரிடம் பணத்தைகேட்டு அக்கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து அந்த கும்பல் செல்வராஜை காரில் கடத்திச் சென்றுள்ளது. இதுதொடர்பாக செல்வராஜின் மகன் குருபிரசாத், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.