சொரகொளத்தூரில் நாற்று நடும் போராட்டம் :

சொரகொளத்தூர் கிராமத்தில் சாலையில் மழைநீரை அகற்ற வலியுறுத்தி நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
சொரகொளத்தூர் கிராமத்தில் சாலையில் மழைநீரை அகற்ற வலியுறுத்தி நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சா புரம் அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரு கின்றனர். ஆனால், ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால், சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், பாட்டை தெருஉள்ளிட்ட வீதிகளில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இரு சக்கர வாகனங்களை இயக்கி செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந் தனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள் ளதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் பலனில்லை. இதனால், பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். டெங்கு நோய் அச்சத்தில் வாழ்கிறோம். அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். தெரு விளக்கும் எரியவில்லை. குப்பைகளும் சேகரிக்கப்படவில்லை. வீதிகளில் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர். பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in