திருச்சியில் மாற்றுத்திறனாளி நல அலுவலரைத் தாக்கிய ஓட்டுநர் கைது :

திருச்சியில் மாற்றுத்திறனாளி நல  அலுவலரைத் தாக்கிய ஓட்டுநர் கைது :
Updated on
1 min read

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிபவர் சந்திரமோகன்(50). இதே அலுவலகத்தில் பாலக்கரை கீழப்புதூர் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர்(40) என்பவர் மாற்றுத் திறனாளிகளுக்கான நடமாடும் வாகனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை ஓட்டுநர் சந்திரசேகரிடம், வாகனத்தின் லாக் புக் கொண்டு வரும்படி சந்திரமோகன் கூறியுள்ளார். அப்போது தனக்கு 2 மாதங்களாக பணம் வரவில்லை எனக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, ஆத்திரமடைந்த ஓட்டுநர், அங்கிருந்த நாற்காலியை எடுத்து அதிகாரியின் தலையில் அடித்துள்ளார். இதனால் தலையில் காயம் ஏற்பட்ட சந்திரமோகனை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அமர்வு நீதிமன்ற போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in