இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் - பறக்கும்படையிடம் சிக்கிய அன்னக் கூடைகள் :

இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் -  பறக்கும்படையிடம் சிக்கிய அன்னக் கூடைகள் :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் கூட்டுரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் 114 அலுமினிய அன்னக்கூடைகள் மற்றும், 144 சீப்புகள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் ஆட்டோவில் வந்தவர் தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் மேற்கண்ட பொருட்களை எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அன்னக்கூடைகள் மற்றும் சீப்புகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அவற்றை சங்கராபுரம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன்நாதனிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in