

மதுரை இஸ்மாயில்புரம் கமில் பாட்சா (51). தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்ட துணைச் செயலாளரான இவர், நேற்று தாசில்தார் நகர் மன்சூர் அகமது (40), கோரிப்பாளையம் ஜெயினுலாபுதீன் (34), சோலை அழகுபுரம் ஜாகீர்உசேன் (49), கடச்சனேந்தல் முகமது உமர் (34), சக்கிமங்கலம் சையது அமஜத்கான் (37), கோரிப் பாளையம் சுல்தான் (29) ஆகி யோருடன் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
துவரங்குறிச்சி அருகே சென்றபோது கார் மீது லாரி மோதியதில் கமில்பாட்ஷா உயிரிழந்தார். காரில் பயணித்த மற்ற 6 பேரும் காயமடைந்தனர்.