

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டையை அடுத்த கருப்பத்தூரைச் சேர்ந்தவர் கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (51) ரவுடி. இவர் கருப்பத்தூரில் உள்ள அவரது தோட்டத்தில் கடந்த 6-ம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து லாலாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்கிற ராஜபாண்டியன்(33), வயலூரைச் சேர்ந்த சரவணகுமார்(25), நாமக்கல் மாவட்டம் வரகூரைச் சேர்ந்த மனோஜ்(25), திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த கார்த்தி(36), கம்மநல்லூரைச் சேர்ந்த சுரேஷ்(36), தெற்கு தெருவைச் சேர்ந்த வினோத்குமார்(36), திருக்காம்புலியூரைச் சேர்ந்த நந்தகுமார்(33) ஆகிய 7 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இக்கொலையில் தொடர்புடைய தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய குளித்தலை டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.