தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பிக்க அக்.31 கடைசி : தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் சி.மாலதி தகவல்

தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பிக்க அக்.31 கடைசி :  தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் சி.மாலதி தகவல்
Updated on
1 min read

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் சி.மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தொழிற்சாலைகள் சட்டத்தின்படியான உரிமம் 2022-ம் ஆண்டுக்கு புதுப்பிக்க வரும் அக்.31-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைன் மூலமாகவே உரிமத்தை புதுப்பிக்க இயலும்.

உரிமத்தைப் புதுப்பிக்க https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, உரிமக் கட்டணத்தையும் இணையம் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். வங்கி வரைவோலைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ஆன்லைனில் கட்டணம் செலுத்தி, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு இணையவழியில் புதுப்பிக்கப்பட்ட உரிமம் பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வரும் 31-ம் தேதிக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தாமதக் கட்டணம் பொருந்தும்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு இணை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், 2/3 அப்துல்சலாம் தெரு, காஜாநகர், திருச்சி-20 என்ற முகவரியிலோ அல்லது 0431 -2420235 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in