

நெய்வேலி அருகே உள்ள தெற்கு வெள்ளூ ரைச் சேர்ந்தவர் கணபதி மனைவி பத்மாவதி (51). இவர் நேற்று ஒரு வேனில் உறவினர்களை ஏற்றிக் கொண்டு தொழுதூர் அருகே உள்ள வடகராம்பூண்டிக்கு சென்றார். வேப்பூர் அருகே தே.புடையூர் கைக்காட்டி அருகே சாலையின் குறுக்கே சிறுவன் ஒருவன் ஓடி வந்தான். அதிர்ச்சியடைந்த வேன் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர புளியமரத்தில் மோதி கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்த பத்மாவதி (51), வேன் ஓட்டுநர் வெங்கடேசன் உள்ளிட்ட 36 பேரும், சாலையில் குறுக்கே ஓடிய சிறுவன்அரிஹரசுதன், சாலையோரம் துணி துவைத் துக் கொண்டிருந்த புவனேஸ்வரி (22) உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். சிறுவன் அரிஹரசுதன் ஜிப்மர் மருத்துவமனைக்கும், பத்மாவதி,ஓட்டுநர் வெங்கடேசன் உள்ளிட்ட 12 பேர்விழுப்புரம், கடலூர் அரசு மருத்துவமனை களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.