

பிஎம் கேர்ஸ் நிதியில் அமைக்கப் பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
கரோனா பரவல் இரண்டாம் அலைக்குப் பிறகு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் திரவ நிலை ஆக்ஸிஜன் உருளை மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
அதன்படி நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் பிஎம் கேர்ஸ் (பிரதமரின் அவசர கால பொதுமக்களுக்கான நிதியுதவி) திட்டத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிஎம் கேர்ஸ் நிதியுதவி திட்டம் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ளஎய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை ஆட்சியர் (பொறுப்பு) ஆ.ம.காமாட்சி கணேசன், நவாஸ்கனி எம்பி, ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மலர்வண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை
சிவகங்கை