சேலத்தில் பூக்கள் விலை உயர்வு :

சேலத்தில் பூக்கள்  விலை உயர்வு :
Updated on
1 min read

நவராத்திரி விழா நேற்று தொடங்கியுள்ள நிலையில், சேலம் வஉசி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

நவராத்திரி விழாவின்போது கோயில்களிலும், வீடுகளிலும் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். வழிபாட்டுக்கு பூக்கள் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

சேலம் வஉசி மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை இரு மடங்கு உயர்ந்தது. அரளிப்பூ கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.120 ஆகவும், சாமந்திப்பூ ரூ.50-ல் இருந்து ரூ.120 ஆகவும், சம்பங்கி ரூ.30-ல் இருந்து ரூ.80 ஆகவும், குண்டு மல்லி ரூ.300-ல் இருந்து ரூ.500 முதல் ரூ.600 வரையும், சன்ன மல்லி ரூ.160-ல் இருந்து ரூ.320 முதல் ரூ.400 வரையும், பட்டன் ரோஸ் ரூ.60-ல் இருந்து ரூ.100 ஆகவும், காக்கட்டான் மல்லி கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.240 ஆகவும், கனகாம்பரம் ரூ.280-ல் இருந்து ரூ.500 ஆகவும் விலை உயர்ந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in