வேதியியல் நோபல் பரிசுக்கு இருவர் தேர்வு :

பெஞ்சமின் லிஸ்ட்
பெஞ்சமின் லிஸ்ட்
Updated on
1 min read

வேதியியலுக்கான நோபல் பரிசுஇரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், ஸ்காட்லாந்தை சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு இவ்வாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டது,

இரு விஞ்ஞானிகளும் வேதியியல் மூலக்கூறு கட்டுமானத்திற்கான புதிய மற்றும் தனித்துவமான வினையூக்கி (asymmetric organocatalysis) கருவியை உருவாக்கியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

வேதியியலில் இருவித வினையூக்கிகளே (உலோகங்கள் மற்றும் நொதிகள்) உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாக நம்பி வந்த சூழலில், இவர்களின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உதவிகரமாக அமைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in