

மத்திய அரசுக்கு எதிராக எம்.நாகராஜ் என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2006-ல் தீர்ப்பு அளித்தது. இதில், “பதவி உயர்வு விஷயத்தில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு அரசு இடஒதுக்கீடு அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை’’ என்று கூறப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமை யிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம், “பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு இடஒதுக் கீட்டை நியாயப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதுதொடர்பாக புள்ளிவிவரம் இருந்தால் காட்டுங் கள்” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.