கோவை சிறுமுகை அருகே : ஊருக்குள் நுழைந்த யானைக்கூட்டம் :

கோவை சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் கிராமத்துக்குள் நுழைந்த யானைக்கூட்டம்.
கோவை சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் கிராமத்துக்குள் நுழைந்த யானைக்கூட்டம்.
Updated on
1 min read

மேட்டுப்பாளையம்: கோவை சிறுமுகை வனப்பகுதியான பெத்திகுட்டையில் நீர் அருந்த கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் வருவது வழக்கம். இங்கு அடர்ந்த காட்டையொட்டி பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதி அமைந்துள்ளதால் இடம் பெயரும் யானைக் கூட்டங்கள் இப்பகுதியில் தாகம் தணித்து விட்டு கடந்து செல்லும். தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகநீர் தேங்கி நிற்பதால் யானைகள் வழக்கமாக செல்லும் பாதைகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. இதனால் இவ்வழியே வலசை செல்லும் யானைகள் திசைமாறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்துவிடுகின்றன. 12 யானைகள் கொண்ட கூட்டமொன்று பெத்திக்குட்டையை அடுத்துள்ள லிங்காபுரம் கிராமத்துக்குள் நேற்று நுழைந்தது.

ஆற்றை கடந்து ஊருக்குள் புகுந்த இந்த யானைகள் அங்கிருந்த ஒரு வாழை தோட்டத்தில் முகாமிட்டன. வனத்துறையினர் சுமார் நான்கு மணி நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் மீண்டும் ஊருக்குள் நுழைய வாய்ப்புள்ளதால் லிங்காபுரம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in