

புதுச்சேரி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மக்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம், புதுச்சேரி கந்தப்பமுதலியார் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் முக்கிய தலைவர்களை மட்டும் சந்தித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் எம்பி வைத்திலிங்கத்துக்கு லேசான காய்ச் சல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது: "எம்பி மற்றும் அவரது மனை விக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருமே கரோனா தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.
தற்போது அவர்களுக்கு லேசான தொற்று அறிகுறி கண் டறியப்பட்டுள்ளது. அவர்கள் ஜிப்பமரில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர்."என்றனர்
நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.