Regional02
கடலாடி அருகே மூதாட்டி கொலை :
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் வைரவபாண்டி யன்(30). இவருக்கும், எம்.கரிசல்குளத்தைச் சேர்ந்த வில்வ காளீஸ்வரிக்கும்(26) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் எம்.கரிசல்குளத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு வில்வ காளீஸ்வரி தனது கணவருடன் சென்றுள்ளார். அன்று இரவு வீட்டின் மாடியில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. வில்வ காளீஸ்வரியின் தாய், தந்தை, தாய் வழிப்பாட்டி நாககனி(70) ஆகியோர் தகராறை விலக்கிவிட்டுள்ளனர். அப்போது வைரவ பாண்டியன் மூதாட்டி நாககனியையும், வில்வ காளீஸ்வரியையும் மாடியிலிருந்து அடித்து மிதித்து தள்ளியுள்ளார். இதில் படுகாயமடைந்த நாககனி இறந்தார். சாயல்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து வைரவபாண்டியனை கைது செய்தனர்.
