தூர்தர்ஷன் மண்டல அஞ்சல் நிலைய ஒளிபரப்பு சேவை நிரந்தர நிறுத்தம் :

தூர்தர்ஷன் மண்டல அஞ்சல் நிலைய ஒளிபரப்பு சேவை நிரந்தர நிறுத்தம் :
Updated on
1 min read

இதுகுறித்து, அதியமான்கோட்டை பிரச்சார் பாரதி அலுவலக துணை இயக்குநர் களஞ்செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் உயர் சக்தி அஞ்சல் நிலையத்தின் மண்டல தரைவழி ஒளிபரப்பு இயங்கி வருகிறது. இந்த நிலையத்தின் ஒளிபரப்பு சேவையை, வரும் 31-ம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தம் செய்ய பிரச்சார் பாரதி வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே, குறிப்பிட்ட தேதியுடன் அதியமான்கோட்டை உயர் சக்தி அஞ்சல் நிலைய மண்டல தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in