மகாளய அமாவாசையையொட்டி - திருவண்ணாமலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் :

மகாளய அமாவாசையையொட்டி, தங்களின் முன்னோர்களுக்கு நேற்று தர்ப்பணம் கொடுக்க வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையில் குவிந்த பொதுமக்கள். அடுத்த படம்: ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் குவிந்த பொதுமக்கள்.
மகாளய அமாவாசையையொட்டி, தங்களின் முன்னோர்களுக்கு நேற்று தர்ப்பணம் கொடுக்க வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையில் குவிந்த பொதுமக்கள். அடுத்த படம்: ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் குவிந்த பொதுமக்கள்.
Updated on
1 min read

புரட்டாசி மாத மகாளய அமாவாசை யில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் வணங்கி வழிபடுகின்றனர்.

அதன்படி, புரட்டாசி மகாளய அமாவாசை திதி நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனால், தி.மலையில் உள்ள அய்யங் குளக்கரையில் அதிகாலையில் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சடங்கில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். புரோகிதர்கள் மூலமாக தர்ப்பணம் கொடுத்து, உயிர் நீத்த மூதாதையர்கள் மற்றும் முன்னோர்களை வணங்கி வழிபட்டனர். திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி, பல்வேறு கிராம மக்களும் வருகை தந்து தர்ப்பணம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கும்போது, அய்யங் குளக்கரைக்கு திருவண்ணாமலை நகர காவல்துறையினர் காலை 9.30 மணியளவில் சென்றனர். அப்போது அவர்கள், தர்ப்பணம் கொடுக்க ஆட்சியர் தடை விதித்துள்ளதால், தர்ப்பணம் கொடுக்கக் கூடாது எனபுரோகிதர்கள் மற்றும் மக்களிடம் கூறினர். இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தர்ப்பணம் கொடுப்பதை பாதியில் நிறுத்திவிட்டு செல்ல முடியாது என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால், 10 மணிக்கு பிறகு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, "மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் என்ற அதீத நம்பிக்கையில் தர்ப்பணம் கொடுக்கிறோம். அதற்கு தடை விதிப்பது நியாயமா?. எங்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்க முடியாது. அதற்காக, புனித இடமாக கருதப்படும் இடங்களில்தான் தர்ப்பணம் கொடுக்க முடியும். அதற்காகதான் அய்யங்குளக்கரைக்கு வந்து தர்ப்பணம் கொடுக்கிறோம். தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதை ஒரு நாளைக்கு முன்பாக தெரிவித்திருந்தால், நாங்களும்மனதள வில் முன்கூட்டியே தயாராக இருந்திருப்போம்.

அதனைவிடுத்து, தர்ப்பணம் கொடுத்து கொண்டிருக்கும்போது வந்து தடை என கூறுவது ஏற்புடையதாக இல்லை” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in