

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 11 மணி முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 432 கனஅடியாக இருந்தது. அணையில் 50.80 அடிக்கு தண்ணீர் உள்ளது.
அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 559 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதேபோல் பாரூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 177 கனஅடியாக இருந்தது.