

சேலம் இரும்பாலை ரோடு தளவாய்ப்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் வரும் 11-ம் தேதி மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர் களுக்கும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழிலதிபர்களுக்கும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப் பட்ட நிறுவனங்களுக்கும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில், வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுதொடர்பான விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், தொலைபேசி எண்களுடன் வரும் 8-ம் தேதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அல்லது rosalem@epfindia.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன மண்டல ஆணையர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.