தற்காலிக பணியாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை :

தற்காலிக பணியாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை :
Updated on
1 min read

கரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட தங்களை தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் செவிலியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கரோனா பேரிடர் காலத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவமனைகளில் செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது கரோனா தொற்று குறைந்த நிலையில் தற்காலிகப் பணியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து நேற்று திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமியை அவரது வீட்டில் சந்தித்த பணி இழந்த செவிலியர்கள், தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சரிடம் எடுத்துக்கூறி பணியில் நீடிக்க ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in