ராமநாதபுரம் மாவட்டத்தில் - இரட்டைமடி வலை பயன்படுத்திய 58 மீனவர்கள் மீது வழக்குபதிவு :

ராமநாதபுரம் மாவட்டத்தில்  -  இரட்டைமடி வலை பயன்படுத்திய 58 மீனவர்கள் மீது வழக்குபதிவு :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தியவர்கள் மீது 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்துவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் இதுவரையில் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் மூக்கையூர் பகுதியில் 6 வழக்குகளும், ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் 52 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கு களில் தொடர்புடையவர்களுக்கு ரூ.5.21 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின்படி கடல் பாசி வளர்ப்புக்காக 557 மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் 6,220 கடலில் மிதக்கும் செயற்கைப் பாசி வளர்ப்பு மிதவை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது 11 மீனவ கிராம மகளிர் செயற்கை பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 10 ஆயிரம் மீனவ மகளிர் கடற்பாசி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பாசி வளர்ப்பில் ஒவ்வொரு மீனவக் குடும்பமும் தினமும் குறைந்தது ரூ.750 வருவாய் ஈட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in