நிரந்தர ஊழியருக்கு இணையான ஊதியம் ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கோரிக்கை :

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் எம்ஆர்பி செவிலியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் எம்ஆர்பி செவிலியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிாில் எம்ஆர்பி செவிலியர்கள் (ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள்) மேம்பாட்டு சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மும்தாஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் நாகராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

போராட்டத்தில், மருத்துவ சேவையை வலுப்படுத்த கூடுதலாக செவிலியர்களை பணி அமர்த்த வேண்டும். தேர்தல் காலத்தில் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சம வேலை செய்யும் எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு, செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது இந்த தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக ஒப்பந்த செவிலியர்கள் அனைவருக்கும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன், பொது சுகாதாரத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவேந்தன், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in