புனலூர் ரயிலை மதுரை வரை நீட்டிக்க கோரிக்கை :

புனலூர் ரயிலை மதுரை வரை நீட்டிக்க கோரிக்கை  :
Updated on
1 min read

செங் கோட்டை ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆனந்த், மதுரை கோட்ட வணிக மேலாளர் கணேஷ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்களிடம் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் முரளி, ராஜேந்திரராவ், கிருஷ்ணன், சுந்தரம் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், ‘செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு காலை 7 மணிக்கும், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு மாலை 5 மணிக்கும் முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்க வேண்டும். ஏற்கெனவே தென் பிராந்திய ரயில்வே கால அட்டவணை கமிட்டியால் பரிந்துரை செய்யப் பட்டபடி தற்போது இயங்கும் குருவாயூர்- புனலூர் விரைவு ரயிலை செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும். கரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட எர்ணாகுளம்- வேளாங்கண்ணி விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in