வாக்குப்பதிவு நாளில் தொழிலாளர்களுக்கு - சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு :

வாக்குப்பதிவு நாளில் தொழிலாளர்களுக்கு -  சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு :
Updated on
1 min read

வாக்குப்பதிவு நாளில் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், "தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள் ளாட்சித் தேர்தல் இன்று 6-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் வரும் 9-ம் தேதியும் நடைபெற உள்ளது.

ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனம், ஐடி நிறுவனம், கடைகள், ஓட்டல்கள், பீடி தயாரிப்பு, ஊதுவத்தி தொழிற் சாலை, தோல் தயாரிப்பு உட்பட அனைத்து தொழில் நிறுவனங் களில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீது மக்கள் பிரதிநிதித்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக் கப்பட்டுள்ளன.

எனவே, இது தொடர்பான புகார்களை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சாந்தி-87785-47940, மனோகரன் 98654-55010, பால சுப்ரமணியன்-94437-55248 ஆகியோரின் கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு வாக்காளர்கள் புகார் அளிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in