

மதுரை மாவட்டம் கருப்பப் பிள்ளையேந்தலில் டாக்டர் டி.திருஞானம் துவக்கப்பள்ளி சார்பில் உலக வனவிலங்குகள் தினம் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் காளியம்மாள் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் க.சரவணன், வனவிலங்குகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
இதில், ஆசிரியர்கள் பாக்யலெட்சுமி, உஷாதேவி, சுமதி, கீதா, சித்ராதேவி, தங்கலீலா, பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலமடை, சிந்தாமணி, அனுப்பானடி, அன்னை சத்யா நகர், அஞ்சுகம் அம்மையார் நகர், வண்டியூர் பகுதிகளில் உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்பட்டது.