வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு :

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு  :
Updated on
1 min read

மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு பள்ளிக்கல்விதுறை, தென்காசி வ.உ.சி வட்டார நூலகம், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் ஆகியவை இணைந்து மாவட்ட அளவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்ளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தின. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு தென்காசி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி தலைமை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார். போட்டிகளில் முதல் 3 இடத்தை பிடித்தவர்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் குமார், முன்னாள் தலைவர் சுப்பாராஜ் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். வாசகர் வட்டதுணைத் தலைவர் அருணாசலம் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாரியப்பன், இளமுருகன், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நூலகர் சுந்தர் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in