

நாமக்கல் பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் கதர் ரகங்களின் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 2021–2022-ம் ஆண்டிற்கு கதர் விற்பனை ரூ.1.48 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.79.72 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், சேந்தமங்கலம் ஆகிய இடங்களில் கதர் அங்காடிகள் மற்றும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், நாமக்கல் மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தேவைக்கேற்றவாறு குறிப் பிட்ட நாட்களில் சிறப்பு விற்பனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டு கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடியும், ஒரு சில பட்டு ரகங்களுக்கு 50 சதவீதமும் அரசால் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.