

மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வர பூவந்தியில் இருந்து திருப்புவனத்துக்கு அரசு பஸ் இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பூவந்தியில் இருந்து திருப்புவனத்துக்குப் போதிய பஸ் வசதியில்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர். எனவே, புதிய பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று மதுரை மண்டல போக்கு வரத்துக் கழகம் சார்பில் பூவந்தியில் இருந்து திருப்புவனத்துக்கு தினமும் காலை 8.30 மணியில் இருந்தும், திருப்புவனத்தில் இருந்து மாலை 4.25 மணியில் இருந்தும் 4 தனி நடைகள் இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இத்தகவலை மதுரை மண்டல அரசு போக்குவரத்துக் கழக அதி காரிகள் தெரிவித்தனர்.