கரூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூரில் 1,35,713 பேருக்கு கரோனா தடுப்பூசி :

கரூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூரில் 1,35,713 பேருக்கு கரோனா தடுப்பூசி :
Updated on
1 min read

கரூர்: கரூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற1,649 முகாம்களில் 1,35,713 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் 4-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 425 இடங்களில் நடைபெற்றன. தடுப்பூசி போடும் பணியில் 2,550 பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில், 17,038 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் 493 இடங்களில் நடைபெற்ற 4-ம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமில் 32,311 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஆதிச்சனூர், வெண்மான்கொண்டான், முட்டுவாஞ்சேரி, சுத்தமல்லி, தூத்தூர், குருவாடி, அழகியமணவாளம், வடுகப்பாளையம், கீழக்கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் 533 இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் மொத்தம் 65,310 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 198 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 21,054 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என மாவட்ட ஆட்சியர் ப. வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in