காந்தி அஸ்தி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலி :

காந்தி அஸ்தி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலி  :
Updated on
1 min read

திருப்பூர் வித்யாலயத்தில் உள்ள தமிழ்நாடு சர்வோதயசங்க வளாகத்தில் அமைந்துள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது. தமிழ்நாடு சர்வோதய சங்க செயலாளர் செந்தில்நாதன்தலைமை வகித்தார். காந்தி மண்டபத்தில் மலர் அஞ்சலியும், சர்வசமய பிரார்த்தனையும் நடந்தது.

இதேபோல அவிநாசி சாலை காந்திநகர் தமிழ்நாடு சர்வோதய சங்க வளாகத்தில் அமைந்துள்ள அஸ்திகலச மண்டபத்தில் சர்வ சமய பிரார்த்தனை நடந்தது.

திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகரில் உள்ள கதர் அங்காடி வளாகத்தில் காந்தியின் உருவப்படத்துக்கு ஆட்சியர்சு.வினீத் மலர்தூவி மரியாதை செலுத்தி, காந்தி ஜெயந்தி கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in