சமுதாய வளைகாப்பு விழா :

சமுதாய வளைகாப்பு விழா :
Updated on
1 min read

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று திருச்சியில் நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு மங்கலப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

இந்த விழாவில், புதிய குடும்ப அட்டை, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி என ரூ.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 66 பேருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

விழாவில், எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ், கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அம்பிகாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in