

இதன்பேரில், திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் கார்த்திகா தலைமையிலான போலீஸார் இந்த கிராமத்தில் சோதனைகளை மேற்கொண்டனர். இதில், சின்ன பொண்ணு என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,392 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.