நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்’ :

நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்’ :

Published on

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2021-22-ம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு, இரு சக்கர வாகனம், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல்கள், பார்வையாளர் களுக்கான பிரைலீ வாட்ச், நவீன செயற்கை கால்கள் மற்றும் கைகள் உட்பட பல்வேறு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. எனவே, நலத்திட்ட உதவி மற்றும் உபகரணங்கள் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக வழங்கலாம்" என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in