பொது இடங்களில் மது குடிப்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் :

பொது இடங்களில் மது குடிப்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் மது குடிப்போர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, பொது இடங்களில் மது அருந்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பான புகார்களை திருவாரூர்(9498110861), நன்னிலம்(9498143926), மன்னார்குடி(9498183264), திருத்துறைப்பூண்டி(9445407674), முத்துப்பேட்டை(9840717894) ஆகிய பகுதிகளின் டிஎஸ்பிக்களை அவரவர் செல்போன் எண்களில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். மேலும், தனிப்பிரிவு அலுவலகம்- 04366 225925, 9498100865, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு திருவாரூர்- 8300058812, நன்னிலம்- 9498175387, திருத்துறைப்பூண்டி- 9498162363, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை- 9498181220, ஹலோ போலீஸ்- 8300087700 ஆகியவற்றையும் செல்போன், தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என எஸ்.பி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in